Anticipating One UI 7.0: What to Expect with Android 15 Rollout

உங்கள் கணினி அல்லது லேப்டாப்பின் வேகம் குறைவாக இருந்தாலோ அல்லது அடிக்கடி ரீஸ்டார்ட் ஆனாலோ, அதை சரி செய்வதற்கான சில உதவிக்குறிப்புகளை இப்போது காணலாம்:
1.Computer-ல் free space இருக்க வேண்டியது மிக அவசியம்.
உங்கள் கணினியின் (Computer) ஹார்ட் டிஸ்க் ஃபுல்லாகி விட்டால், தரவை செயலாக்க கணினி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். Hard disk-ல் அவ்வப்போது space-ஐ free செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். உங்கள் கணினியில் உள்ள, அடிக்கடி பயன்படுத்தப்படாத சில தரவுகளை external hard drive-ல் சேவ் செய்து விடலாம். இதன் மூலம் உங்கள் hard disk-லும் ஸ்பேஸ் கிடைக்கும், கணினியும் வேகமாக செயல்படும்.
.
.
2. தேவையற்ற Program-களை Uninstall செய்யவும்
தேவையில்லாமல், வெறும் சோதனை பயன்பாட்டிற்காக பல மென்பொருள்கள் கணினியில் இருப்பதுண்டு. நாம் ஒவ்வொரு முறை விண்டோசை ஓப்பன் செய்யும் போதும் இந்த மென்பொருள்களும் ஓப்பன் செய்யப்படும். இந்த மென்பொருள்கள் உங்கள் கணினியின் RAM மற்றும் ப்ராசசரை பயன்படுத்துகின்றன. இதனாலும் உங்கள் கணினியின் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட மென்பொருள்களை நீங்கள் uninstall செய்து விடலாம். இதற்கு Control panel-க்கு சென்று, அங்கு Program & Feature-ல் சென்றால் அங்கு அந்த மென்பொருள் இருக்கும். அதில் கிளிக் செய்து uninstall செய்ய வேண்டும்.
.
.
3- Start-up Programs-ஐ Disable செய்யவும்.
முன்னர் கூறியது போல நாம் கணினியை ஆன் செய்தவுடனேயே சில Start-up Programs-ம் ஆன் ஆகி வேகத்தை குறைக்கும். இவற்றை disable செய்ய, key board-ல், "ctrl + alt + dlt" பொத்தானை அழுத்தி, Task Manager-ஐ ஓப்பன் செய்து, அங்கு start up tab-ல் சென்று, தேவையற்ற program-களை disable செய்ய வேண்டும்.
.
.
4. மீண்டும் Windows-ஐ இன்ஸ்டால் செய்யலாம்
மேலே கொடுக்கப்பட்டவற்றை செய்த பின்னரும் உங்கள் கணினியில் எந்த மாற்றத்தையும் நீங்கள் காணவில்லை எனில், நீங்கள் கணினியில் புதிதாக விண்டோசை இன்ஸ்டால் செய்யலாம். ஏனென்றால் வைரஸ் காரணமாக கணினியின் வேகம் குறைந்திருக்கலாம். சில வைரஸ்களை ஆன்டி-வைரஸ் மென்பொருளாலும் அகற்ற முடிவதில்லை. அப்படிப்பட்ட நேரங்களில் நம் கணினியில் புதிதாக Windows-ஐ நிறுவ வேண்டி இருக்கும்.